மும்பையில் பயங்கர தீ, 80 கடைகள் சாம்பல்! - Fire breaks out in factory
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11041086-356-11041086-1615962586649.jpg)
மும்பை மலாட் கிழக்கு பகுதியில் உள்ள தின்தோஷி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தார் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அருகில் இருந்த 80 கடைகள் தீக்கிரையாகி சாம்பலாகின. இந்நிலையில், 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.