தென் ஆப்பிரிக்க மக்களின் ஆதரவால் மகிழ்ச்சியடைந்தேன் - டேவிட் வார்னர்! - டேவிட வார்னர்
கேப் டவுன்: பந்தை சேதப்படுத்திய வழக்கின் தடைக்குப் பின் ஆஸ்திரேலிய அணியின் டேவிட வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மீண்டும் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியானது நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது.
மேலும் இந்த போட்டிகாக இரு அணி வீரர்களும் இரு தினங்களுக்கு முன்பாகவே அங்கு வந்து தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் , தென் ஆப்பிரிக்க நாட்டு ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
அவர்கள் எங்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையையும் வைத்துள்ளனர். பவுண்டரிலைனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் போன்றே எங்களிடன் ஆட்டோகிராஃப் கேட்கின்றனர்.
இதனை காணுகையில் எங்களுக்கு மீண்டும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். நாளையப்போட்டியைப் பற்றிய பேசிய அவர், கடந்த 18 மாதங்களாக நாங்கள் இந்த மைதானத்தில் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்றது கிடையாது.
அதனால் இந்த பிட்ச்சின் தன்மை குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. அதேபோல் தென் ஆப்பிரிக்க போன்ற வலிமையான அணியுடன் நடக்கும் இப்போட்டினால் எங்களின் அனுபவத்தை பின்பற்றிய விளையாட உள்ளோம். ஏனெனில் நாங்கள் வருகிற டி20 உலகக்கோப்பையை நோக்கமாக வைத்து விளையாடவுள்ளோம்.
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இதே மைதானத்தில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, ஓராண்டு தடையையும் பெற்றனர்.
இந்நிலையில் ஓராண்டு தடையிலிருந்து மீண்டுள்ள அவர்கள் தற்போது மீண்டும் முதன்முறையாக கேப்டவுனில் விளையாடவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க:மார்ச் 2 முதல் பயிற்சியில் களமிறங்கும் தல தோனி!