மணிரத்னம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - சரத்குமார் - ராதிகா நடிக்கும் வானம் கொட்டட்டும்
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தற்போது விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, இவர்களின் பெற்றோராக சரத்குமார் - ராதிகா நடித்துவரும் படம் வானம் கொட்டட்டும். இந்தக் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஃபேமிலி டிராமா படமாக உருவாகிவருகிறது.
சென்னை: இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துவரும் வானம் கொட்டட்டும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இயக்குநர் மணிரத்னம் திரைக்கதை எழுத, புதுமுக இயக்குநர் தனா இயக்குகிறார். இவர் மணிரத்னத்தின் உதவியாளராக சில படங்களில் பணிபுரிந்துள்ளார்.
முன்னதாக படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இதையடுத்து வரும் ஜனவரி மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாகவும் அவர்களது பெற்றோராக சரத்குமார் - ராதிகா சரத்குமாரும் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஃபேமிலி டிராமா படமாக வானம் கொட்டட்டும் திரைப்படம் உருவாகிவருகிறது.
இப்படத்தின் மூலம் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடிய பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
Body:இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்'. இயக்குனர் தான இயக்கம் இந்தப் படம் தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன்,
சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடித்துள்ளனர் தனா இயக்குகிறார்.
சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகள் போன்றவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை 'வானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல் பாடல், இரண்டாவது பாடல், டீஸர், டிரைலர் & இசை வெளியீடு ஆகியவை வெளியிடப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
Conclusion:இறுதி கட்ட பணிகள் முடிந்துள்ள அடுத்தாண்டு ஜனவரியில் இந்த படம் வெளியிடப்பட உள்ளது.