அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது! - Amitabh Bachchan honoured with Dada Saheb Phalke award
திரைத் துறையில் கொடுக்கப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பெற்றார்.
திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படுவது தாதா சாஹேப் பால்கே விருது. இந்த விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நடிகர் அமிதாப் பச்சன் இன்று பெற்றார்.
தனது 77ஆவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய அமிதாப் பச்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தற்போது அவருக்கு உடல்நலம் தேறியதாகக் கூறப்பட்ட நிலையில் இன்று ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரிடமிருந்து தாதா சாஹேப் பால்கே விருதை அமிதாப் பெற்றார்.
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இவ்விருது அமிதாபுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த், அபிஷேக் பச்சன், லதா மகேஷ்கர், அணில் கபூர், கரன் ஜோஹர், அர்ஜுன் கபூர் எனத் திரையுலகினர் பலரும் அமிதாபுக்கு தங்களது வாழ்த்துகளைப் பதிவு செய்துவருகின்றனர்.
இவ்விருதுக்கு ரூபாய் 10 லட்சமும் தங்கத் தாமரையும் கொடுக்கப்படுவது வழக்கம்.
இதையும் படிங்க: அறந்தாங்கியில் எண்ட்ரி கொடுத்த குட்டி நிஷா!
AMITHIB BACHAN Receives Thatha Shae Balgae AWARD
Conclusion: