உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசை (தீநுண்மி) கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறிவருகின்றன. தீநுண்மி தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இதுவரை உலகளவில் இரண்டு கோடியே 74 லட்சத்து 79 ஆயிரத்து 200 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 96 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. தீநுண்மியிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 95 லட்சத்து 73 ஆயிரத்து 99 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் மட்டும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 957 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.