கோழிக்கோடு (கேரளா): அடுக்குமாடி கட்டட கட்டுமான பணியின்போது, கான்கிரீட் தளம் ஒன்று சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோழிக்கோடு மாவட்டத்தின் பொட்டமல் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சலீம், கார்த்திக் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் மொத்தம் ஐந்து பேர் படுகாயங்களுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். அதில் இருவர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள நபர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட கான்கிரீட் தளத்தை, பணியாளர்கள் பொருத்தும் நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராமோஜி பிலிம் சிட்டி: தெலங்கானா மாநிலத்தின் சிறந்த சுற்றுலாத் தலத்துக்கான விருது