ETV Bharat / crime

EXCLUSIVE: 'பெர்டோ' ஏடிஎம் தான் டார்கெட்.. ஓராண்டில் 10 இடங்களில் ஒரே பாணியில் கைவரிசை! - தனிப்படை போலீசார் விசாரணை

திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட அதே பாணியில் கடந்த ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் தொடர்புள்ளவர்களின் விவரங்களை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்
author img

By

Published : Feb 13, 2023, 2:07 PM IST

Updated : Feb 13, 2023, 2:20 PM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மர்மநபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களை தேடி தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் நடந்த இதே போன்ற ஏடிஎம் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய ஒரு கும்பலே திருவண்ணாமலையிலும் இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு மாநிலங்களில் கொள்ளையர்கள் ஒரே பாணியில் ஏடிஎம்களில் கொள்ளையடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பை ராய்காட் பகுதியில் 56 லட்சம், அதே மாதம் மேற்கு வங்கம் பட்வான் என்ற இடத்தில் 17.30 லட்சம், பிப்ரவரி மாதம் குர்கானில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் 77 லட்ச ரூபாயும், ஏப்ரல் மாதம் பீகாரில் 24 லட்சம் ரூபாயும், மே மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார பகுதியில் 19.65 லட்சமும் இதே பாணியில் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா ஏடிஎம் கொள்ளையர்கள்
ஆந்திரா ஏடிஎம் கொள்ளையர்கள்

அதேபோல் ஜூன் மாதம் டெல்லி சத்யா நிக்கேதன் பகுதியில் இருபது லட்சம் ரூபாயும், புனேவில் 5 லட்சம் ரூபாயும், கடந்த அக்டோபர் மாதம் தானே பீவாண்டி பகுதியில் 20 லட்ச ரூபாயும், கடந்த நவம்பர் மாதம் குஜராத் காந்திநகர் பகுதியில் எட்டு லட்ச ரூபாயும், கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் 20 லட்சம் ரூபாயும் ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி கொள்ளையடித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவங்களை போலீசார் ஆய்வு செய்ததில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த கொள்ளையர்கள் ஏடிஎம்களை நீண்ட நாட்களாக நோட்டமிடுகின்றனர். பிறகு பாதுகாவலர்கள் இல்லாத, அதேநேரம் அதிக பணம் நிரப்பப்படும் ஏடிஎம்களை குறி வைத்து கொள்ளையடிக்கின்றனர். ஏடிஎம்களில் பணம் நிரப்பும் ஊழியர்களின் உதவியோடு மட்டுமே இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக நள்ளிரவு நேரத்திலும், அதிகாலையிலும் யாரும் இல்லாத நேரத்தில் எடிஎம்களின் உள்ளே புகுந்து சிசிடிவி கேமராக்களை கருப்பு மை கொண்டு மறைத்து விடுகின்றனர். அதன்பின் கேஸ் கட்டர்களை வைத்து ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி பணத்தை கொள்ளையடித்துச் செல்கின்றனர். அதன் பிறகு கைரேகை உள்ளிட்ட தடயங்கள் எதுவும் போலீசாருக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக ஏடிஎம் மையங்களை தீ வைத்து கொளுத்திவிடுகின்றனர்.

பெட்ரோ ஏடிஎம்
பெட்ரோ ஏடிஎம்

இந்த கொள்ளையர்கள் அதிகமாக எஸ்பிஐ வங்கிகளிலும், சில தனியார் வங்கிகளிலும் தங்களது கைவரிசையை காட்டி இருப்பது கடந்த கால சம்பவங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. அதுவும் குறிப்பாக பெர்டோ வகை ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கும் மையங்களை மட்டுமே கொள்ளையர்கள் குறிவைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல்களை பெற்று, தமிழ்நாடு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாரேனும் திருவண்ணாமலையில் கொள்ளையடித்துச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்று கொள்ளையடிக்கும் பாணியை வடமாநிலத்தவர்கள் ஜம்தாரா வெப் சீரிஸில் வருவது போன்று, ஒரே இடத்தில் பயிற்சி பெற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்.. இவர்கள் தான் - ஐஜி கண்ணன் பேட்டி

Last Updated : Feb 13, 2023, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.