சென்னை: தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் இயங்கி வரும் ஏராளமான ஐ.டி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக அப்பகுதியைச் சுற்றி பல்வேறு தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் (22) என்பவர் என்பவர் திருவேங்கடம் நகர் ஒன்றாவது தெருவில் உள்ள வெங்கடசாய் என்ற தனியார் தங்கும் விடுதியில் உள்ள நபர் ஒருவரிடம் தனது வங்கி இருப்பில் ஒரு லட்சம் ரூபாய் இருப்பதாகவும், அதனை எடுக்கத் தேவைப்படும் 5000 ரூபாய் அளித்தால் உடனே திருப்பித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த நபரும் ரூபாய் ஐயாயிரத்தை சச்சின் குமாருக்கு வழங்கியுள்ளார். பின்னர் திரும்பக் கேட்பதற்காக அவரது என்னை அழைத்த போது என் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர் அவர் குறித்த விவரங்களைத் தனது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அதே போல் ஹரிஹர சாஸ்தா என்ற மற்றொரு தனியார் தங்கும் விடுதியில் இதே போன்று சச்சின் குமார் கூறி அங்கு உள்ள மற்றொரு நபரிடம் பணத்தைப் பெற முயற்சித்துள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட அந்த நபர் ஏற்கனவே ஏமாந்து போன தனது நண்பர் கூறியது போல் இறந்ததால் அவரை புகைப்படம் எடுத்து தனது நண்பருக்கு அனுப்பி உறுதி செய்து கொண்டார்.
பின்னர், ஏற்கனவே ஏமாற்றப்பட்ட அந்த நண்பர் உறுதிப்படுத்தியதை அடுத்து அவர் மீது தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய தரமணி போலீசார் சச்சின் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.