- தமிழ்நாட்டில் சதமடித்த பெட்ரோல் விலை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது. இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- ஒரே நாடு ஒரே சுகாதார அணுகுமுறை: அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் இடம்பெற்றுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பேசுகிறார். முன்னதாக சனிக்கிழமை பேசிய நரேந்திர மோடி, எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை அவசியம். நோய்த்தொற்று பரவல் குறித்து வெளிப்படைதன்மை வேண்டும். ஒரே பூமி, ஒரே சுகாதார அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஒன்றிணைவோம் வா: கரூரில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் 3,19,816 குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடக்கிவைக்கிறார்.
- டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு: கரோனா பரவலுக்கு மத்தியில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக இன்று போராட்டம் அறிவித்துள்ளது. அதன்படி பாஜக தொண்டர்கள் வீடுகளில் கறுப்புக்கொடியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி: கோவை மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடக்கிறது.
- வடவானிலை: வடக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி இன்று வலுவடையும் நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வடவானிலையை நிலவும்.
- தடுப்பூசி முகாம்: ஈரோடு மாவட்டத்தில் இன்று 42 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதேபோல் கீழ்வேளூரிலும் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இன்றைய நிகழ்வுகள்- செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday
ஈடிவி பாரத்தின் இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.
Important TN State and national events to look for today Important events today நரேந்திர மோடி ஜி7 பெட்ரோல் உதயநிதி ஸ்டாலின் கரோனா தடுப்பூசி மாற்றுத்திறனாளிகள் வடவானிலை டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு பாஜக இன்றைய நிகழ்வுகள்