சென்னை தலைமை செயலகத்தில் மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக் 19) நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாடு அரசு கல்விக்காக காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம், தகைசால் பள்ளிகள் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதன் காரணமாக அரசு பள்ளிகளில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 26 ஆயிரம் புதிய வகுப்பறைகள், 7,500 சுற்றுசுவர் தேவை இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
ஆகவே முதல்கட்டமாக ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளுக்கு 200 கோடி ரூபாய் செலவில், 6,000 புதிய வகுப்பறைகள். 250 கோடி ரூபாய் செலவில் நடுநிலை பள்ளிகளுக்கு 1,200 வகுப்பறையிகள் என ஒட்டுமொத்தமாக 1,050 கோடி ரூபாய் செலவில் 7,200 வகுப்பறைகள், இந்தாண்டு புதிதாக கட்டப்பட்டும். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வியும் பாதுகாப்பான சூழலையும் உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆட்சியில் மழையோ மழை... எங்கு பார்த்தாலும் வெள்ளம்... துரைமுருகன்