ETV Bharat / city

பறவைகளுக்குத் தொந்தரவு வேண்டாமே... பட்டாசு இன்றி தீபாவளி கொண்டாடும் கிராமத்தினர்! - பறவைகளுக்கு தொந்தரவு வேண்டாமே

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள கிராமத்தினர் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வரும் பறவைகளுக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாது என தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகளே வெடிக்காமல் கொண்டாடி வருகின்றனர். அதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 19, 2022, 4:50 PM IST

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே 'வெள்ளோடு பறவைகள் சரணாலயம்' அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன. கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது இந்த சரணாலயம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாகக் குளம் மற்றும் மரங்கள் வறண்டுபோனது. இதனையடுத்து ரூ. 2 கோடியே 35 லட்சம் செலவில் இந்தப் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, சரணாலயத்தைச்சுற்றிலும் கரைகள் பலப்படுத்தப்பட்டதோடு சிறு பாலங்கள், நடைபாதைகளில் பறவைகளின் ரம்மியமான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனிடையே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்ஃபி பாயின்ட் என எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.

பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன. ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் சீசன் தொடங்கும். இதனையொட்டி, இந்த காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வருகின்றன.

தவிர சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ணநாரை, நெடுங்கல் உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக இந்த சரணாலயத்திற்கு வருகின்றன.

இப்பறவைகள் அனைத்தும் இங்குள்ள குளத்தில் குளித்து கும்மாளமிடுவதோடு, அதிலுள்ள மீன்களை உணவாக உண்டு தங்களின் பசியைத் தணிக்கின்றன. இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன. இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் சத்தத்தைக் கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை இந்த பறவைகள் அளிக்கின்றன.

இந்தப் பறவைகளின் கூட்டத்தைக் காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் இங்கு வருவது உண்டு. மேலும், இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலுள்ள கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாகவே, இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 16ஆவது ஆண்டாகப் பட்டாசு வெடிக்காத தீபாவளியை கொண்டாடுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டும் இதே வழக்கத்தைப் பின்பற்ற உள்ளனர்.

பறவைகளுக்குத் தொந்தரவு வேண்டாமே... பட்டாசு இன்றி தீபாவளி கொண்டாடும் கிராமத்தினர்!

குறிப்பாக, இந்த சரணாலயத்தின் அருகே உள்ள கிராமங்களில் திருமணமான புதுமணத் தம்பதிகள் கூட, தங்களின் தலைத் தீபாவளியை குடும்பம் குடும்பமாகச் சேர்ந்து வாழும் பறவைகளுக்காகவும் மாசடையாமல் சுற்றுச்சூழலைக் காக்கவும் இந்த வழக்கப்படியே தங்களின் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

அத்துடன், தங்களால் இயன்ற அளவிற்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர். இவ்வாறு ஆண்டுதோறும் அயல்நாடுகளிலிருந்து வந்து செல்லும் பறவைகளைக் காண்பதற்குப் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் எனப் பலரும் வருவது தங்களது கிராமத்திற்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: நினைவோ ஒரு பறவை...மதுரையின் நினைவுகளை சுமக்கும் மகத்தான ஓவியர் மனோகர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.