ETV Bharat / city

துப்பாக்கிச்சூடு படுகொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் - கே. பாலகிருஷ்ணன் - ஸ்டெர்லைட் துப்பாக்சூடு குறித்து கே பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த படுகொலைக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

k balakrishnan cpim on thoothukudi shooting

author img

By

Published : Oct 19, 2022, 12:10 PM IST

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திக் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், இதுவரையிலும் ஏதோ அப்பாவி போல ஊடகங்களிடம் நடித்து வந்தார்.

இப்போதும், துப்பாக்கிச் சூட்டின் கொடூரம் தொடர்பாக கள்ள மெளனம் சாதிப்பதுடன், சபாநாயகரை கண்டித்து உண்ணாவிரதம் என்ற பெயரால் திசைதிருப்பும் நோக்கத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பெரும் தவறு குறித்த எந்தவித குற்ற உணர்வும் இல்லாத இந்த போக்கு கிரிமினல் தனமான ஒன்று. தமிழ் நாட்டு மக்கள் இதனை மன்னிக்கவே மாட்டார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - ஆட்சியர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.