இன்றைய கோவிட் பாதிப்பு! - இன்றைய கோவிட் பாதிப்பு
கரோனா பரவல் அறியப்பட்டு 716 நாள்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக நாட்டில் பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
புது டெல்லி : நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் 58 ஆக பதிவாகியுள்ளன.
ஆக இதுவரை கரோனா பெருந்தொற்று வைரஸினால் 5 லட்சத்து 21 ஆயிரத்து 416 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் நாடு முழுக்க கரோனா பாதிப்புகள் பெருமளவு குறைந்துவருகின்றன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தற்போது 12 ஆயிரத்து 54 பேர் கரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் கரோனா பாதிப்பு 0.03 விழுக்காடு ஆக உள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 184.87 விழுக்காடு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தத் தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.