ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புடைய சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை - ADMK VAITHILINGAM ASSET FREEZE

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை லோகோ, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்
அமலாக்கத்துறை லோகோ, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2025, 11:13 AM IST

Updated : Jan 16, 2025, 12:26 PM IST

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை தற்காலிகமாக முடக்கியுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து ஆலோசனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2011 - 2016 ஆண்டு வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், சிஎம்டிஏ (CMDA) திட்ட அனுமதியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 27.90 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த வழக்கைக் கையில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒரு வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணை விவகாரம்: "அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்னது சுத்த பொய்" - ஓபிஎஸ்

அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சில ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அதில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்குச் சொந்தமான ரூ.100.90 கோடி மதிப்புடைய இரண்டு அசையா சொத்துக்களை தற்காலிகமாக முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது, இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை, ஆலோசனை நடத்திய பின்னர் எடுக்கப்படும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 16, 2025, 12:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.