ETV Bharat / state

கனி, நெல்லுடன் சென்று எடப்பாடிக்கு நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி விவசாயிகள்! - FARMERS THANK EDAPPADI PALANISAMY

மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்வதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட போராட்ட நடவடிக்கை எடுத்தாகக் கூறி, அரிட்டாப்பட்டி விவசாயிகள் அவரது இல்லத்திற்குச் சென்று நன்றி தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த அரிட்டாப்பட்டி கிராம மக்கள்
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த அரிட்டாப்பட்டி கிராம மக்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 7:38 AM IST

Updated : Jan 29, 2025, 11:25 AM IST

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு கிராம மக்கள் சார்பில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு அரிட்டாபட்டி விவசாயிகள் நேரில் சென்று, நன்றி தெரிவித்தனர்.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளருக்கு விவசாயிகள் கனிகள், நெல்மணி விதைகளைக் கூடையில் கொண்டு வந்து அன்பளிப்பாகக் கொடுத்தனர். அப்போது, விவசாயிகளிடத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உங்களுக்காக டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை மாநில, மத்திய அரசு கைவிடக் கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும், கண்டனம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டோம். பின்னர், தனித் தீர்மானத்தை முதலமைச்சர் தாக்கல் செய்தார். அந்த தனித் தீர்மானத்தில் நான் 2 மணி நேரம் உங்களுக்காக உரையாற்றினேன். நான் விவசாயி என்பதால் உங்களின் பிரச்சினைகளையும், மன நிலையையும் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த அரிட்டாப்பட்டி கிராம மக்கள்
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த அரிட்டாப்பட்டி கிராம மக்கள் (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சரிடம் நான் கேட்டது ஒன்று தான். சுரங்க திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மாநில அரசு, மத்திய அரசுக்கு அரிய வகை கனிமங்களை வெட்டி எடுக்கக் கூடாது என்று ஏன் கடிதம் எழுதவில்லை? என்பது. அதற்கு முதலமைச்சர் இன்று வரை பதில் கூறவில்லை. இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டு 9 மாத காலம் அரசு எதுவும் செய்யவில்லை.

உண்மையிலேயே இந்த திட்டம் மக்களை பாதிக்கக்கூடிய திட்டமாக கருதியிருந்தால் சுரங்கத்திற்கான டெண்டர் விடப்பட்ட தொடக்கத்திலேயே கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், நாம் இந்த அளவிற்கு போராட்டம் நடத்திக் கஷ்டப்பட்டிருக்கத் தேவையில்லை. யாருக்கோ உதவி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு நினைத்தது.

ஆனால், நீங்கள் அந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைப் பார்த்து விட்டு பின் வேறு வழி இல்லாமல் முதலமைச்சர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். நான் என் உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளை காப்பாற்றுவேன் என்று சொன்னேன். அதன் பிறகு தான் முதலமைச்சர் வந்து தன் பதவியே போனாலும் பரவாயில்லை திட்டத்தை செயல்படுத்த விட மாட்டேன் என்றார்.

திமுக ஆட்சியில் தான் விவசாயிகள் பாதிக்கக் கூடிய திட்டம் வருகிறது. டெல்டா மாவட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்த பொழுது தான் 'ஹைட்ரோ கார்பன்', 'மீத்தேன்' போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. நான் இன்றும் விவசாயம் செய்து கொண்டு தான் இருக்கிறேன். அதிமுக என்றும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருதமலையில் ஆசியாவிலேயே உயரமான முருகன் சிலை.. 160 அடிக்கு அமைக்க திட்டம் - அமைச்சர் சேகர் பாபு தகவல்!

தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கூறுகையில், “டங்ஸ்டன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முழு முதல் நடவடிக்கை எடுத்தார். அதனால் அவருக்கு விவசாயிகள் நன்றி தெரிவிக்க வருகை புரிந்தனர்.

குறிப்பாக, சட்டமன்றத்தில் டங்ஸ்டன் பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். வெளியூர்க்காரர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவதாகச் சர்ச்சைகள் எழும்பிய போது, உண்மையான மேலூர் கிராமத்தில் உள்ள பெரியவர்கள், பொதுமக்கள் தான் போராட்டத்தில் உள்ளனர் என்பதை உரைக்கச் சொன்னார்” என்றார்.

இதையடுத்து, பேசிய விவசாயி அம்பலக்காரர் சுரேஷ், “எங்கள் விவசாயத்தைப் பாதுகாத்துக் கொடுத்ததற்கு அனைவருக்கும் நன்றி. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எங்கள் ஊருக்கு அழைத்து, நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடத்த உள்ளோம். அதற்காக அவரிடம் தேதி கேட்டு அழைப்பு விடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

Last Updated : Jan 29, 2025, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.