ETV Bharat / state

மருங்கூர் அகழாய்வுத்தளத்தில் கிடைத்த உடைந்த இரும்பு கத்தி! - IRON KNIFE FOUND IN EXCAVATION

கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் உடைந்த நிலையில் கிடைத்த இரும்பு கத்தி
அகழாய்வில் உடைந்த நிலையில் கிடைத்த இரும்பு கத்தி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 11:13 AM IST

Updated : Jan 30, 2025, 12:01 PM IST

கடலூர்: விருதுநகரில் வெம்பக்கோட்டை, திருவண்ணாமலையில் கீழ்நமண்டி, புதுக்கோட்டையில் பொற்பனைக்கோட்டை, தென்காசியில் திருமலாபுரம், கிருஷ்ணகிரியில் சென்னானூர், திருப்பூரில் கொங்கல் நகரம் போன்று கடலூரில் மருங்கூர் என்ற இடம் உள்பட இதுவரை எட்டு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெறும் அகழாய்வில் ராஜராஜன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச் சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள், செம்பினால் ஆன அஞ்சனக் கோல் ஆகிய தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.29) 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அகழாய்வு நடக்கும் காட்சி
அகழாய்வு நடக்கும் காட்சி (ETV Bharat Tamil Nadu)

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பினாலான அம்பு முனை, ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது இந்த கத்தி கிடைத்துள்ளது. கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத் தேர்ந்திருந்தது புலப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்ததானது, “இரும்பின் தொன்மை குறித்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அறிவியல் ஆய்வு முடிவுகளை முதலமைச்சர் உலகிற்கு அறிவித்த ஒரு சில தினங்களில், கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ் நிலப்பரப்பில் இரும்பின் தொன்மை இருந்ததை தெளிவுபடுத்தும் சிவகளை அகழாய்வு!

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பினாலான அம்பு முனை, ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது.

இதற்கு முன்னர் மருங்கூர் அகழாய்வில், ராஜராஜ சோழன் காலத்துச் செம்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரெளலட்டட் பானை ஓடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில், தற்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் இது என்பது உறுதியாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Jan 30, 2025, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.