ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் ஐஎஸ்ஐ சான்றிதழ்! - MANAK MANTHAN

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும், ஐஎஸ்ஐ சான்றிதழ் தந்து தரத்தை உறுதி செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைவர் பவானி கூறுயுள்ளார்.

மானக் மந்தன் கலந்துரையாடல் நிகழ்ச்சி
மானக் மந்தன் கலந்துரையாடல் நிகழ்ச்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 10:51 AM IST

Updated : Jan 30, 2025, 11:46 AM IST

சென்னை: இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் செயற்கை மூட்டுகள், மறுவாழ்வு உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (ஜன.29) 'மானக் மந்தன்’ என்ற பெயரில் நடைபெற்றது.

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச் சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.

இந்நிலையில் நடத்தப்பட்ட 'மானக் மந்தன்’ நிகழ்ச்சி குறித்து இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் பவானி கூறுகையில், “இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS) மாற்றுத்திறனாளிகளின் இயக்கத்தை மேம்படுத்துவதற்காகச் செயற்கை கால்கள், வீல் சேர், மறுவாழ்வு உபகரணங்கள் உள்ளிட்டவை தரத்திற்கான சான்றிதழ்களை பெற வேண்டும். இந்திய தர நிர்ணய அமைவனம் 143 வகையில் தர நிர்ணயம் செய்துள்ளது.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைவர் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளனர். அவர்களிடம் உற்பத்தியாளர்கள் தங்களின் பொருட்களை சமர்பித்து தர சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தரமான உபகரணங்களை ஐஎஸ்ஐ முத்திரையுடன் வழங்கும் போது நீண்ட நாட்கள் உழைப்பதுடன், நுகர்வோருக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

அரசு நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களில் வாங்கும் பொருட்கள் ஐஎஸ்ஐ தரத்துடன் இருப்பதை உறுதி செய்து, டெண்டர் விட வேண்டும். அப்போது நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைக்கும். தற்பொழுது மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படும் செயற்கைப் பொருட்களுக்கு ஐஎஸ்ஐ சான்றிதழ் கட்டாயம் என்ற விதி இல்லை. வரும் காலங்களில் வரும் போது அதற்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் தயாராக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிரானது" - டாக்டர்கள் சங்கம்!

மேலும், இது குறித்து இருதயவியல் மூத்த மருத்துவர் சொக்கலிங்கம் பேசும் போது, “மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உபகரணங்கள் தரமானதாக இருக்க வேண்டும். இந்திய தர நிர்ணய அமைவனம் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், முக்கியமான திருத்தங்கள் மற்றும் பரவலான வரைவுகளை உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறை மற்றும் வர்த்தக அமைப்புகளுக்கு பகிரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதயங்களில் பொருத்தப்படும் கருவிகளும் தர நிர்ணயத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது இருதயம் நன்றாக செயல்படும். வாழ்நாளில் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உணவிலும் கட்டுப்பாடு வேண்டும். மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தால் 100 ஆண்டுகள் இருதய பாதிப்பு இல்லாமல் வாழலாம்” எனத் தெரிவித்தார்.

Last Updated : Jan 30, 2025, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.