ETV Bharat / state

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழ்நாட்டு மீனவர்கள்! - ARRESTED FISHERMEN RELEASED

தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

தமிழகம் திரும்பிய மீனவர்கள்
தமிழகம் திரும்பிய மீனவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2025, 11:27 AM IST

சென்னை: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள், ஆகஸ்ட் 27 மற்றும் நவம்பர் 11 ஆகிய இருவேறு நாள்களில் வெவ்வேறு படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அப்போது, அதிகாலை நேரத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் கப்பல்களில் வந்து, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்தனர். மேலும், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 15 மீனவர்களையும் அடுத்தடுத்து கைதுசெய்து, அவர்களின் படகுகளையும் இலங்கைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மீனவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்கள் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: பக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இடிந்தகரை மீனவர்கள்; வரவேற்று மகிழ்வித்த அப்பாவு!

இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் தமிழ்நாடு மீனவர்கள் 15 பேரையும் விடுவித்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. தூதரக அதிகாரிகள் மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்துக்கொண்டு, அவர்களை விமானத்தில் சென்னைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

மீனவர்கள் அனைவருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள் அவசரக்கால சான்றிதழ்கள் வழங்கி அனைவருக்கும் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்தனர். அதன்பின்பு நேற்று இரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் 15 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் மீனவர்களை வரவேற்றனர். அதன்பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் அவர்களுடைய சொந்த ஊர்களான ராமநாதபுரம், நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.