புதுடெல்லி: தலைநகரான டெல்லியில் பனிமூட்டம் அதிகரித்து காலநிலை மோசமாக இருந்த காரணத்தால், டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை மற்றும் 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
கடந்த நில நாட்களாகவே வடஇந்தியாவில் கடும் மூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லியில் ஏற்பட்ட பனிமூட்டத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்களைக் கூட காண முடியாத அளவுக்கு பனிமூட்டம் சாலைகளில் சூழ்ந்துள்ளது. இதனால், விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.
விமான சேவைகள் தாமதம்: இதுகுறித்து டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதுவரை எந்த ஒரு விமானமும் திருப்பிவிடப்பட்டதாகவோ அல்லது ரத்து செய்யப்பட்டதாகவோ தெரிவிக்கப்படவில்லை. ஆனால், வானிலையில் குறைந்த தெரிவுநிலை (Low visibility) மற்றும் மூடுபனி காணப்படுவதாகச் சேவையில் தாமதம் ஏற்பட வழிவகுத்துள்ளது. வானிலையை விமான நிலைய அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். மேலும், பயணிகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் அழைத்துச் செல்ல எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
Update issued at 07:35 hours.
— Delhi Airport (@DelhiAirport) January 15, 2025
Kind attention to all flyers!#DelhiAirport #FogAlert pic.twitter.com/otuIjee7rA
இண்டிகோ (IndiGo) தனது எக்ஸ் (X) தளத்தில், "டெல்லி விமான நிலைய ஆப்பரேட்டர் (DIAL) தரப்பில், விமான நிலையத்தில் தொடர் தரையிறக்கம் மற்றும் புறப்பாடு விமானத்தால் CAT III இணைப்பு விமானங்கள் பாதிக்கப்படலாம் எனத் தெரிக்கப்பட்டுள்ளது. மேலும், காலநிலை மோசமாக உள்ள காரணத்தால், Flightradar24.com என்ற இணையத்தில் கிடைக்கும் தகவலின் படி, 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை தாமதமாகின" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
#6ETravelAdvisory: Stay updated on your flight status via https://t.co/IEBbuCsa3e for the latest information. pic.twitter.com/U7KWVVVwKi
— IndiGo (@IndiGo6E) January 15, 2025
இதுகுறித்து டெல்லி விமான நிலையம் தனது எக்ஸ் (X) தளத்தில், "பயணிகள் மாற்றம் செய்யப்பட்ட விமான சேவை தொடர்பான விவரங்களை, தொடர்புடைய விமான நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை பாதிப்பு:
கடந்த சில நாட்களாக நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக 26 ரயில்களின் சேவை தாமதமாகயுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தாமதமான ரயில்களின் விவரம்:
- பீகார் எஸ் கிராந்தி Bihar S Kranti (வண்டி எண் - 12565) 285 நிமிடங்கள் தாமதம்
- ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் Shram Shakti Express (வண்டி எண் - 12561) - 290 நிமிடங்கள் தாமதம்
- கோரக்தாம் எக்ஸ்பிரஸ் Gorakhdham Exp (வண்டி எண் - 12555) 255 நிமிடங்கள் தாமதம்
- என்டிஎல்எஸ் ஹம்சாஃபர் NDLS Humsafer (வண்டி எண் - 12275) 195 நிமிடங்கள் தாமதம்
- மகாபோதி எக்ஸ்பிரஸ் Mahabodhi Exp (வண்டி எண் - 12397) 160 நிமிடங்கள் தாமதம்
- அயோத்தி எக்ஸ்பிரஸ் Ayodhya Exp (வண்டி எண் - 14205) 189 நிமிடங்கள் தாமதம்
- எல்கேஓ என்டிஎல்எஸ் ஏசி எக்ஸ்பிரஸ் LKO NDLS AC Exp (வண்டி எண் - 14209) 370 நிமிடங்கள் தாமதம்
டெல்லி காற்றின் தரக் குறியீடு (AQI):
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், இன்று காலை 7 மணிக்கு டெல்லியில் AQI 344 ஆக இருந்ததாகவும், அதே நேரத்தில் நேற்று (ஜன.14) AQI 252 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. CPCB தரவுகளின்படி, லோதி சாலையில் AQI 287 (IITM) மற்றும் 291 (IMD) தரக் குறியீடு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு புதிய நெருக்கடி!
மேலும், மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் - 368, மந்திர் மார்க் - 378, முண்ட்கா - 372 மற்றும் NSIT துவாரகா - 242; நஜாப்கர் - 255, நரேலா - 377, நேரு நகர் - 394, மற்றும் வடக்கு வளாகம், DU 382 (IMD) பதிவாகியுள்ளன. அதேபோல், ஓக்லா கட்டம்-2 இல் 380, பட்பர்கஞ்ச் 390, மற்றும் பூசாவில் 355 AQI பதிவாகியுள்ளது.
ஆர்.கே.புரம் - 373, ரோகிணி - 399, ஷாதிபூர் - 313, மற்றும் சிரிஃபோர்ட் 360 என AQI பதிவாகியுள்ளது. சோனியா விஹார் - 315, ஸ்ரீ அரவிந்தோ மார்க் - 222, விவேக் விஹார் - 414, மற்றும் வஜீர்பூர் - 408 எனவும், விவேக் விஹார் - 414 என அதிகபட்ச AQI பதிவாகியுள்ளது. இது மிகவும் மோசமான மாசு அளவைக் குறிக்கிறது.