மது பாட்டிலில் கிடந்த ஸ்டிக்கர்.. வைரலாகும் வீடியோ! - sticker found in liquor bottle - STICKER FOUND IN LIQUOR BOTTLE
🎬 Watch Now: Feature Video
Published : Jul 30, 2024, 4:50 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையில் நேற்று (திங்கட்கிழமை) மதுப்பிரியர் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த மதுபாட்டிலில் ஸ்டிக்கர் போன்ற பொருள் தென்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், அது குறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டடுள்ளார். அப்போது அவர் சரிவர பதிலளிக்காததாக கூறப்படுகிறது. பின்னர், மது பாட்டிலை வாங்கிய நபர், பாட்டிலுக்குள் இருந்த ஸ்டிக்கரை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களில் பல்லி உள்ளிட்டவை இருப்பதாக வீடியோக்கள் வைரலான நிலையில், தற்போது மது பாட்டிலுக்குள் ஸ்டிக்கர் இருக்கும் வீடியோ வெளியாகி மதுப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விளையாடிய பாம்புகளை பிரித்த மக்கள்.. குழியில் பதுங்கிய பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினர்!