ஆயிரம் வீரர்களுடன் நடைபெற்ற மல்லர் கம்பம் சாதனை நிகழ்வு...விழுப்புரத்தில் அசத்தல்! - Villupuram Mallakhamb - VILLUPURAM MALLAKHAMB
🎬 Watch Now: Feature Video
Published : Jul 22, 2024, 7:18 PM IST
விழுப்புரம்: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான, மல்லர் கம்பம் விளையாட்டை நிறுவிய உலக துரையின் 85ம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, விழுப்புரத்தில் 100 மல்லர் கம்பங்களை நட்டு, ஒரே நேரத்தில் 1000 மல்லர் கம்ப வீரர்கள் சாகசகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மல்லர் கம்ப கழக பொதுச்செயலாளர் துரை செந்தில்குமார் வரவேற்பு வழங்கினார். தமிழ்நாடு மல்லர் கம்பம் கழக புரவலரும் திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளருமான கௌதம சிகாமணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் சுஜாதா தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சியில், 18 மாவட்டங்களைச் சேர்ந்த 3 வயது முதல் 21 வயது வரை உள்ள ஆண், பெண் மல்லர் கம்ப வீரர்கள் ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில், ஒரு மல்லர் கம்பத்தில் 10 பேர் வீதம், 100 கம்பங்களில், 15 நிமிடங்களில் செய்து சாதனை நிகழ்த்தினர்.