உலக பார்வை தினத்தையொட்டி, டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையில் அக் 31ம் தேதி வரை குழந்தைகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Wed Oct 09 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY WED OCT 09 2024
Published : Oct 9, 2024, 7:50 AM IST
|Updated : Oct 9, 2024, 11:04 PM IST
டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையில் அக்.31 வரை குழந்தைகளுக்கு இலவச கண் சோதனை
சென்னை: சாலையில் இருந்த பள்ளத்தால் அரசு பேருந்து ஓட்டுநர் மரணம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மாநகர பேருந்து ஓட்டுநர் முருகேசன் மீது அரசுப் பேருந்து(MTC) மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. | Read More
எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் காலியிடத்திற்கு 'மாப் ஆப்' கவுன்சிலிங் அறிவிப்பு!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான 3வது சுற்றுக் கலந்தாய்விற்கு (மாப் ஆப் MOP-UP) இன்று முதல் 11 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது. | Read More
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு அக்.14ஆம் தேதி முதல் வகுப்பு.. கட்டண உயர்வு தொடர்பாக அமைச்சர் விளக்கம்
இந்த ஆண்டு தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு, கட்டண உயர்வு வேண்டி கட்டண நிர்ணய குழுக்கு கோரிக்கை வைத்தது ஆனால் குழு தலைவரான நீதிபதி அதை நிராகரித்து உத்தரவிட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். | Read More
சித்தூரில் உதயமாகிறது வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் புதிய கிளை
வேலூர் சிஎம்சி கல்லூரி மருத்துவமனை ஆந்திர மாநிலம் சித்தூரில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க உள்ளது. இதற்கு அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.500 கோடி மானியம் வழங்குகிறது. | Read More
உதயநிதி ஸ்டாலின்: மிதிக்கட்டும்; அப்படியாவது அழுக்கேறிய மூளை சுத்தமாகட்டும்!
ஆந்திராவில் தன் புகைப்படத்தை மிதிப்பது போன்று பரவிவரும் ஒரு காணொளியை தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு, அதற்கான பதிலையும் பதிவாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். | Read More
பார்க்கிங்கால் வந்த பிரச்னை; சினிமா பாணியில் பூட்டை உடைத்து தள்ளிச்செல்லப்பட்ட கார்!
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் கார் பார்க்கிங் செய்வதில், இரு வீட்டு நபர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், ஒருவரது காரின் பூட்டை உடைத்து ஆட்களை வைத்து மற்றொரு நபர் தள்ளிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. | Read More
அமைச்சர் வருகைக்காக ஒத்திவைக்கப்பட்ட விழா; போராட்டத்தில் இறங்கிய பள்ளி மாணவர்களின் பெற்றோர்!
திருநெல்வேலியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வருகைக்காக பள்ளியின் புதிய கட்டட திறப்பு விழாவை ஒத்திவைத்த நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More
'அந்த சத்தம்'.. அடுத்த நொடியே பயங்கரம்.. திருப்பூர் வெடி விபத்து எப்படி நடந்தது?
திருப்பூர் வெடி விபத்து எப்படி நடந்தது மற்றும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். | Read More
அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் நடத்தலாம்; சாம்சங் ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
சாம்சங் நிறுவன ஊழியர்கள் அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் இனி சிறப்பு வசதிகளுடன் பேருந்தில் பயணிக்கலாம்! எப்படி?
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கொடியசைத்து துவங்கி வைத்தார். | Read More
நெருங்கும் தீபாவளி..பட்டாசு விற்பனை சங்கத்தினர் தமிழக அரசுக்கு வைத்துள்ள 'வெயிட்டான' கோரிக்கை!
ஆன்லைன் பட்டாசுகள் அனைத்தும் தர மற்றவை. அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். | Read More
பகலில் தங்கம் விற்பனை.. இரவில் ஷோஷியல் மீடியாவில் பெண்கள் விற்பனை.. போலீசிடம் சிக்கிய பலே இளைஞர்!
சமுக வலைதளத்தில் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதள கணக்கு உருவாக்கி இரண்டு வருடங்களாக மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். | Read More
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் மேலும் 2,206 இடங்கள் சேர்ப்பு.. துறைவாரியாக காலிப் பணியிடங்கள் விவரம்!
குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. | Read More
ரூட்டு தல மோதலால் நிகழ்ந்த கொலை! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கல்லூரிக்கு வரும் திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கல்லூரியின் முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார். | Read More
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கிரிக்கெட்? - விசிக நிர்வாகியை தாக்கியதாக புகார்; தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்கு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம்பிடித்த விசிக நிர்வாகி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. | Read More
கோவை ரேக்ளா பந்தயத்தின் போது நிகழ்ந்த விபத்தில் வைரல் வீடியோ!
கோவை சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் போலீசாரின் அனுமதியின்றி இளைஞர்கள் நடத்திய ரேக்ளா பந்தய விபத்து வீடியோ வைரல்; சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். | Read More
'நிதி இன்னும் வரல'.. 32,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வருமா? - அமைச்சர் ஷாக் தகவல்!
மத்திய அரசின் நிதி வராததால் 32,298 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாகக் கூடிய நிலையில் உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். | Read More
கொட்டும் மழையிலும் தொடரும் ஸ்டிரைக்.. சாம்சங் ஊழியர்கள் விவகாரத்தில் நடப்பது என்ன?
காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 31வது நாளாகப் போராடி வரும் நிலையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். | Read More
13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு! சிவகங்கை அருகே 'ஆசிரியம்'
சிவகங்கை அருகே 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 'ஆசிரியம்' எனப்படும் அரிய வகை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. | Read More
சாம்சங் ஊழியர் போராட்டம்: சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டி தொடரும் வேலைநிறுத்தம்! கைது நடவடிக்கைகள் எதற்கு?
திருபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் (Samsung Employees Protest) செப்டம்பர் 9 அன்று தொடங்கி இன்றுவரை நடைபெற்று வரும் நிலையில், அது கடந்து வந்த பாதையை சற்று விரிவாகப் பார்க்கலாம். | Read More
வேறு மாநிலத்திற்கு செல்கிறதா சாம்சங் தொழிற்சாலை? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் சாம்சங் தொழிற்சாலை, வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மறுப்பு தெரிவித்துள்ளார். | Read More
திருச்சி ஜல்லிக்கட்டில் அதகளம் செய்த காளையா இது.. எவ்ளோ ஏலத்துக்கு போச்சுன்னு தெரியுமா?
திருச்சியில் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை 90 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலத்தொகை அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. | Read More
ரேஸ் கிளப்பில் குளங்கள் அமைக்கும் பணியை நிறுத்த கோரிய வழக்கு - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக, அங்கு செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. | Read More
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலா? - காஞ்சிபுரம் போலீஸ் பரபரப்பு விளக்கம்! - SAMSUNG WORKERS PROTEST
போராட்டத்திற்கு சென்ற சாம்சங் ஊழியர்களை காஞ்சிபுரம் போலீசார், தடுத்து நிறுத்தி பேருந்தில் அடையாள அட்டை சோதனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
"இப்படித்தான் துணி துவைக்கணுமா?" - மதுரை மாணவர்களிடம் வாழ்க்கைக் கல்வி கற்ற ஆஸ்திரேலிய மாணவர்கள்!
ஆஸ்திரேலியாவிலிருந்து கல்வி, பண்பாடு, அறிவு, அன்பு பரிமாற்றத்திற்காக மதுரை வந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள், தமிழக மாணவர்களிடமிருந்து துணிகளை கையால் துவைப்பது முதல் கட்டுமானப் பணிகள் வரை கற்றுக் கொண்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துள்ளனர். | Read More
'ரூட்டு தல' மோதலால் மாணவர் கொலை! மேலும் மோதலை தடுக்க போலீஸ் உஷார்
சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவர் ரூட்டு தல மோதலால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மோதலை தடுக்கும் விதமாக சென்னை முழுவதும் கல்லூரி மாணவர்கள் கண்காணிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். | Read More
சாம்சங் தொழிலாளர்கள் கைது விவகாரம்; அவசர வழக்காக விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம்!
போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு எடுப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. | Read More
லஞ்ச ஒழிப்புத் துறைக்கே லஞ்சமா? சேலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!
சேலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
நிதி வழங்காமல் பிடிவாதமாக உள்ள மத்திய அரசு.. போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்!
பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதி வழங்காமல் வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். | Read More
தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; வேலை நிறுத்தம் அறிவித்துள்ள சிஐடியு!
சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வரும் 21 ஆம் தேதி காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. | Read More
முதியவரின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!
முதியவரின் ஓய்வூதிய பணப்பலன்களை நிறுத்தி வைத்து ஆதிதிராவிட நலத்துறையின் மாநில அளவிலான ஆய்வு குழு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
காவல்துறை தாக்கியதில் கணவர் உயிரிழந்ததாக மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
காவல்துறை தாக்கியதில் தனது கணவர் திராவிடமணி உயிரிழந்ததாக கூறி அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடக்கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More
"ஹரியானாவில் ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்ப்பு" - வானதி சீனிவாசன்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவில் ஹரியானாவில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றியால், ராகுல் காந்தியின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது என பாஜக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். | Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 27 பேரின் நீதிமன்ற காவலை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரின் நீதிமன்ற காவலையும் வரும் 22ஆம் தேதி நீட்டித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More
திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் உள்ள சத்யா காலனி என்ற பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த குழந்தைகள் உள்பட எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். | Read More
1 ரூபாய் ஊறுகாய் பாக்கெட்டுக்காக நடந்த கொலை வெறிதாக்குதல்.. சென்னை குற்றச் செய்திகள்!
ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டு மளிகை கடைக்காரர் மீது கத்தியால் தாக்குதல் உள்ளிட்ட சென்னையின் முக்கிய குற்றச் சம்பவங்கள் குறித்துப் பார்க்கலாம். | Read More