ETV Bharat / state

மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தமிழ்நாடு வானிலை - கோப்புப் படம்
தமிழ்நாடு வானிலை - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூழலில் இன்று (டிசம்பர் 12) வியாழக்கிழமை 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போதைய, வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LIVE FEED

4:44 PM, 12 Dec 2024 (IST)

100 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் சுமார் 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது.

3:59 PM, 12 Dec 2024 (IST)

24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை

கடந்த 24 மணி நேரத்தில் சமவெளிப்பகுதிகளான கன்னியாகுமரியில் அதிகபட்ச வெப்பநிலையாக 34.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும், ஈரோடு மாவட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 16.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது.

3:54 PM, 12 Dec 2024 (IST)

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை..

கடலோர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3:53 PM, 12 Dec 2024 (IST)

24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு..!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்சமாக 18 சென்டி மீட்டர் முதல் 11 சென்டி மீட்டர் வரையிலும் குறைந்தபட்சமாக 5 சென்டி மீட்டர் முதல் 1 சென்டி மீட்டர் வரையிலும் மழையின் அளவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3:39 PM, 12 Dec 2024 (IST)

16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

திருவள்ளூர்,சென்னை,செங்கல்பட்டு, உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2:41 PM, 12 Dec 2024 (IST)

சென்னை கத்திபாரா சுரங்கப்பாதை மூடல்..!

சென்னையில் இதுவரை 3 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும், அதில் கத்திபாரா சுரங்கப்பாதையும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2:38 PM, 12 Dec 2024 (IST)

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று (டிச.12) இரவு முதல் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2:33 PM, 12 Dec 2024 (IST)

மீண்டும்.. மீண்டுமா..?

சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது சென்னையைச் சேர்ந்த மக்கள் தங்களது கார்களை மழை நீரிலிருந்து காத்து கொள்ளம் விதமாக வேளச்சேரி பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.