திருநெல்வேலி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) வழங்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் அண்டை மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்திலும் அதிக மழை அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலிக்கு ரெட் அலர்ட்! 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! - TAMIL NADU WEATHER UPDATE
Published : Dec 13, 2024, 9:30 AM IST
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர், முடிச்சூர், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் 16 மாவட்டப் பள்ளிகளுக்கும், 11 மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
LIVE FEED
திருநெல்வேலியில் அதி கனமழைக்கு வாய்ப்பு!
இயல்பை விட அதிக மழை!
தமிழ்நாட்டில் இயல்பை விட 32 விழுக்காடு அதிகம் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்பிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவே, 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பிப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நீலகிரி: உதகை - குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து!
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை இன்றும் நாளையும் (டிசம்பர் 13, 14) என இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி: தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல தடை!
பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட அங்கலக்குறிச்சி அருகே உள்ள தாடகை நாச்சியம்மன் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் ஆங்காங்கே மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்களின் நலன் கருதி தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கவியருவியில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இருப்பதால், சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்: பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு!
தொடர் கன மழை காரணமாக வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம், 25 அடியாக இருந்த நிலையில், தற்போது 7 அடி உயர்ந்து 32 அடியாக உள்ளது.
அம்பாசமுத்திரத்தில் குளத்தின் கரை உடைந்து குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்!
அம்பாசமுத்திரம் தூர்கை அம்மன் கோவில் தெருவில் எதிரில் உள்ள பெரிய குளம் நிரம்பி சக்தி நகர் மற்றும் பெரியகுளம் தெரிவில் (சுமார் 200 வீடுகளை) உள்ள குடியிருப்பு பகுதியில் நீர் சூழ்ந்துள்ளது. சுமார் 2 அடி உயரம் வரை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். குளத்து நீரானது, மழை நீர் கால்வாய் வழியாக செல்வதால், அமலச் செடிகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் வெளியேற முடியாமல், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
தேனி சாலையை பதம்பார்த்த ராட்சத பாறை!
தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து உள்ள நிலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் இடர்பாடுகளை அகற்ற விரைந்துள்ளனர்.
செம்பரம்பாக்கத்தில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறப்பு!
சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில், இன்று காலை 6.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.29 (24 மொத்த அளவு) அடியாகவும், கொள்ளளவு 3,453 மில்லியன் (3,645 மில்லியன் கன அடி) கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 6,498 கன அடியாகவும் உள்ளது. எனவே, அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக காலை 9 மணியளவில் வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே, எரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பாறை விழுந்து துண்டான சாலை!
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடை குறிச்சி அருகே மணிமுத்தாறு அருவிக்கு கீழே பெரிய பாறை ஒன்று உருண்டு சாலை இரண்டாக துண்டிக்கப்பட்டது. தற்போது பொக்கலைன் இயந்திரங்கள் உதவியுடன் பாறையை அகற்றும் பணிகள் நடைபெறுகிறது. பாறையை அகற்ற முடியாமல் உள்ளதால், இரண்டு ஊர்களுக்கும் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையுடன் பாறையை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக புழல் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம்!
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில், இன்று காலை 6.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 19.69 (21.20) அடியாகவும், கொள்ளளவு 2950 மில்லியன் (3300 மில்லியன் கன அடி) கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2281 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே, புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.