தமிழ்நாடு

tamil nadu

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எம்.பி., நவாஸ்கனி மனு!

By

Published : Dec 25, 2020, 8:46 PM IST

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மனு அளித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எம்.பி., நவாஸ்கனி மனு
வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எம்.பி., நவாஸ்கனி மனு

ராமநாதபுரம்:இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்ளா ஆகியோரிடம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மனு அளித்தார்.

இன்று (டிச.25) டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களை சந்தித்து தமிழ்நாடு இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்ளா சந்தித்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்குமா? - ஆர்.எஸ்.பாரதி கலாய்!

ABOUT THE AUTHOR

...view details