ETV Bharat / sports

ஒலிம்பிக் பேட்மிண்டனில் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வி! - Paris Olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 4:32 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் அரைஇறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வியை தழுவினார்.

Etv Bharat
Lakshaya Sen (AP)

பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன் விளையாட்டு அரைஇறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்சல்செனை எதிர்கொண்டார். தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த லக்சயா சென், சிறிது நேர்த்திற்கு பின் பின்னடைவை சந்தித்தார்.

அதேபோல் தொடக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்டர் ஆக்சல்சென் அதன் பின் தனது சுயரூபத்தை காட்டி லக்சயா சென்னை மிரட்டினார். கடும் போட்டிக்கு மத்தியில் முதல் செட்டை விக்டர் ஆக்சல்சென் 22-க்கு 20 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் விக்டர் ஆக்சல்சென் 21க்கு 14 என்ற கணக்கில் வென்று அபார வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் விக்டர் ஆக்சல்சென் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்திய வீரர் லக்சயா சென் தோல்வியை தழுவினார். தொடர்ந்து வெண்கலப் பதக்கத்திற்கான விளையாட்டில் லக்சயா சென் விளையாட உள்ளார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு இப்படி ஒரு சோதனையா? - Paris Olympic Games 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.