மேஷம்: ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். ஆனால், புதிய உணவு ஏதேனும் சுவைத்துப் பார்க்க உங்களுக்கு விருப்பம் இருக்கும். நெடுநாட்களாகச் சந்திக்காமலிருந்த நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் நேரம் செலவழிப்பது பலன் தரும்.
ரிஷபம்: உங்களது நெருங்கிய நண்பர்கள், குறிப்பாக உங்கள் எதிர் பாலினத்தைச் சேர்ந்த நண்பர்கள் பற்றி அதிகம் சிந்திப்பீர்கள். திடீரென்று நீங்கள் காதல் வயப்பட்டுள்ளதை உணர்வீர்கள். காதல் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அச்சம் ஏதுமின்றி அதைப் பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் உங்களுக்கு திருமண உறவு கைகூடும்.
மிதுனம்: பல்வேறு மக்கள் உங்களிடம் பலவகையான கோரிக்கைகளை வைக்கக்கூடும். அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிரமம் இருக்கும். ஆனால், அவர்களைத் திருப்திப்படுத்த, நீங்கள் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவீர்கள். உங்களது செயல் திறனையும், ஆற்றலையும் மக்கள் பாராட்டுவார்கள்.
கடகம்: இன்று, மாற்றம் ஏற்படுவதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படவும். அமைதியாக இருப்பது நல்லது. சூழலுக்கு ஏற்றபடி நடந்து கொண்டால், உங்கள் பணி எளிதாக முடியும். இன்று மகிழ்ச்சியும், பொழுது போக்கும் இருக்கும். சமூகத்துறை தொடர்பான வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்: பல்வேறு மக்கள் உங்களை பாராட்டுவார்கள். ஆனால், நடந்தவற்றை நினைத்து நீங்கள் திருப்தியடைய மாட்டீர்கள். சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காமல், அதுகுறித்து கவலை கொள்வீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, நீங்கள் உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கப்படுவீர்கள்.
கன்னி: இன்று குடும்ப விவகாரம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணத்தை உங்கள் குடும்பத்தினர் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தக விஷயத்தைப் பொறுத்தவரை, நிலைமை சாதாரணமாக இருக்கும். மாலையில் சிறிது ஓய்வாக நேரத்தை கழிக்கலாம். கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பும் உள்ளது.
துலாம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, மாலை வரை உங்களது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதால், அனுமானிக்க முடியாத வகையில் இருப்பீர்கள். இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அதனால் அதனை எதிர்கொள்ள, மனதை தயார்படுத்திக் கொள்ளவும்.
விருச்சிகம்: காதல் உணர்வானாலும் சரி அல்லது உங்கள் மேலதிகாரி ஆனாலும் சரி அவர்கள் மனதை வெள்ள சரியான நேரமாகும். உங்கள் உணர்ச்சிகளை அவர்களிடம் வெளிப்படுத்த ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில், திட்டமிட்ட வகையில் பணிகளைத் தொடங்குவீர்கள். மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது.
தனுசு: நீங்கள் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தலைமைப் பண்புடன், உங்களின் கீழ் பணிபுரிபவர்கள் ஆலோசனைக்காக அணுகினால், அவர்களை வழி நடத்துவீர்கள். அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவீர்கள். பொதுவாக இன்று, நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகரம்: உங்களது சாதனைகளின் காரணமாக, வாழ்க்கையில் சாதிப்பதற்காகப் பிறந்த பிறவியைப் போல் உணர்வீர்கள். எது செய்தாலும், அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி கிடைக்கும். எனினும், முயற்சிகள் ஏதும் இன்றி, வெற்றி கிடைக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது முக்கியம். நாளை, உங்களுக்கு அவ்வளவு சாதகமாக இருக்காது என்பதால், இன்றைய தினத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும். உங்களது நண்பர்கள் உங்களது செயல் திறனையும், ஆளுமைப் பண்பையும் பாராட்டுவார்கள்.
கும்பம்: சந்தேகங்களும், கவலைகளும் காற்றில் கரைந்து போய், நீங்கள் வெற்றி இலக்கை நோக்கி உறுதியாக செல்வீர்கள். வெற்றிப்பாதையில், பலரின் மனங்களையும் வெற்றி கொள்வீர்கள்.
மீனம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களது புத்திசாலித்தனம் வெளிப்படும். உங்களது தன்னம்பிக்கை காரணமாக, முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை நிறைவு செய்வீர்கள். விதியின்படி நடக்கட்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் அறிவார்ந்த விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். எனினும் உங்கள் பொறுப்புகளை விட்டு விலக வேண்டாம்.