சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் பாஜக கட்சி சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
இதில் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் கபிலன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சில அவதூறு கருத்துக்களை கபிலன் பேசியதாக தெரிகிறது.
மேலும், கூட்டம் முடியும் தருவாயில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீஷனிடம், தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாசர்பாடியில் உள்ள கபிலன் வீட்டிற்கு நேரில் சென்று அவரை கைது செய்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வடசென்னைக்கு புதிய டிஐஜி; 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - ஆடி அமாவாசை நாளில் தமிழக அரசு அதிரடி! - IPS Officers Transfer