ETV Bharat / state

"ஜன.6 இல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்": ஆளுநர் உரை குறித்து சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன? - TAMIL NADU ASSEMBLY SESSION 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது என்று தமிழக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2024, 6:06 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது என்றும், ஆளுநர் உரையை முழுமையாக படிப்பார் என மீண்டும் நம்புகிறோம் எனவும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவைக் கூட்டம் தொடங்கும். கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் வாசித்தார். இந்த முறை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம் என்று அப்பாவு தெரிவித்தார்.

"100 நாட்கள் சட்டமன்றம் நடைபெறவில்லை" என்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, "குளிர்கால கூட்டத்தொடர் கடந்த காலங்களில் 2 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் விதிமுறை காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரை அதிகமான நாட்கள் நடத்த முடியவில்லை. வெள்ளம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அரசு இயந்திரங்கள் களத்தில் இருக்க வேண்டிய சூழல் இருந்தது. மானிய கோரிக்கை கூட்டத்தொடர் காலை, மாலை என இரு வேலைகளில் நடைபெற்றபோது அரசு அதிகாரிகள் கடுமையாக உழைத்தனர். அரசின் எண்ணம் 100 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவதுதான். வரக்கூடிய நாட்களில் அதை பூர்த்தி செய்யும் விதமாக கூட்டம் நடத்தப்படும்." என்று அப்பாவு கூறினார்.

மேலும் பேசிய அவர், "எதிர்க்கட்சி தலைவருக்கு சட்டமன்றத்தில் உரிய அந்தஸ்து, நேரம் கொடுக்கப்படுகிறது. பூஜ்ஜிய நேரத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை உள்ளது. ஆனால் அரை மணி நேரத்திற்கு முன்னதாக சபாநாயகருக்கு தெரிவிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனாலும் முதலமைச்சர் கோரிக்கைக்கேற்ப எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி அளித்தோம். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற வித்தியாசத்தை அரசு பார்ப்பதில்லை. ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் நடைபெறுகிறது" என்றும் அப்பாவு தெரிவித்தார்.

ஆளுநர் இந்த முறை தமது உரையை முழுமையாக படிப்பார் என மீண்டும் நம்புகிறோம். ஆளுநருக்கு உரை நிகழ்த்த தான் அனுமதியே தவிர கருத்து சொல்ல அனுமதி இல்லை என இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி.. ஆளுநருக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.