ETV Bharat / entertainment

தாத்தா வராரே.. கதறவிட போறாரே.. இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - INDIAN 2 OTT Release date - INDIAN 2 OTT RELEASE DATE

Indian 2 on OTT: இந்தியன் 2 படம் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியன் 2 பட போஸ்டர்
இந்தியன் 2 பட போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 4, 2024, 2:16 PM IST

சென்னை: பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, விவேக், மனோபாலா, ஜெகன், காஜல் அகர்வால், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு உலகம் முழுவதும் கடந்த ஜூலை 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் நீளம் கருதி 'இந்தியன் 2' மற்றும் 'இந்தியன் 3' என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டது. வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை அன்று, இப்படம் 30 கோடியே 75 லட்சம் ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்த இப்படம், விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இந்த படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்தியன் 2 படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் விவகாரத்தில் இழப்பீடு பெற்றாரா இளையராஜா? - வழக்கறிஞர் விளக்கம்! - Manjummel boys song issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.