ETV Bharat / state

ஜனநாயக முறைப்படி நடைபெற்ற 'நாட்டாமை' தேர்தல் - வேலூரில் சுவாரஸ்யம்! - NATTAMAI ELECTION

NATTAMAI ELECTION : வேலூர் சின்ன அல்லபுரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி நாட்டாமை தேர்தல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் முதல் வாக்கு சாவடியில் போலீஸ் பாதுகாப்பு வரை என படுசுவாரஸ்யமாக இத்தேர்தல் நடைபெற்றது.

வேலூரில் நடைபெற்ற நாட்டாமை தேர்தல்
வேலூரில் நடைபெற்ற நாட்டாமை தேர்தல் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 8:02 PM IST

வேலூர்: சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த 42,48,49 ஆகிய வார்டுக்களுக்கு உட்பட்ட 18 தெருக்களில் உள்ள 900 வீடுகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊர் நாட்டாமை,செயலாளர்,பொருளாளர் ஆகியோரை நியமித்து கிராமத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.

வேலூரில் நடைபெற்ற நாட்டாமை தேர்தல் (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும், இவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் ஆணையம் நடத்துவதுபோல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி ஊர் நாட்டாமை,செயலாளர்,பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு என்ன நடைமுறையை பின்பற்றுகிறதோ அதே நடைமுறையில் ஊர் நாட்டாமை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சின்னல்லாபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் 900 பேர் வாக்களித்தனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில் இன்று (ஆகஸ்ட் 4) போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், நாட்டாமைக்கான பதவிக்கான போட்டியில் செந்தில்குமார், சரவணன், மூர்த்தி ஆகியோர் வேட்பாளராகவும், ஊர் செயலாளர் பதவிக்கு சங்கர், சரவணன், பாபு ஆகியோரும் ஊர் பொருளாளர் பதவிக்கு மணிகண்டன், கருணாமூர்த்தி ஆகியோரரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட நிலையில், வாக்காளர்கள் தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு சென்றனர்.

வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை யாரும் பார்த்திராத அளவிற்கு தனியாக வாக்களிக்கும் பெட்டி வைக்கப்பட்டு அங்கு வாக்களித்த பின் நாட்டாமை, செயலாளர், பொருளாளர் என தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டியில் வாக்குச்சீட்டுகளை போட்டுவிட்டு வாக்காளர்கள் சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

இதையும் படிங்க: வடசென்னைக்கு புதிய டிஐஜி; 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - ஆடி அமாவாசை நாளில் தமிழக அரசு அதிரடி! - IPS Officers Transfer

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.