சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஹிந்தியை வைத்து அரசியல்:
மேலும் அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு மக்கள் மத்தியில் அரசியல் நோக்கத்தோடு ஹிந்தியை எதிர்க்கிறது. இவ்வாறு ஹிந்தியை எதிர்ப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது இல்லை. புதிய கல்வி கொள்கையின் மும்மொழி கொள்கையை அரசியல் சாசன விதிமுறைப்படி நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு மட்டுமே அரசியல் நோக்கமாக இந்த கல்வி கொள்கையை எதிர்க்கிறது.
ஹிந்தி முதன்மையான மொழி:
மத்திய அரசு எந்த மாநிலங்களையும் தாய்மொழியை மறந்து ஹிந்தியை கற்றுக்கொள்ள சொல்லவில்லை. இந்தியாவில் ஹிந்திதான் முதன்மையான மொழியாக உள்ளது. இந்த கருத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், தமிழ்நாடு அரசு மக்களை குழப்புகின்றனர். அரசியல் காரணங்களை வைத்து புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் புதியக் கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி இல்லை என கூறியதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மும்மொழிக் கொள்கை எந்த சட்டத்தில் உள்ளது?
அதில், “ 'They have to come to the terms of the Indian Constitution' என்ற ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல.
" they have to come to the terms of the indian constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.
— M.K.Stalin (@mkstalin) February 16, 2025
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால்… pic.twitter.com/NtbYkV4FZK
இதையும் படிங்க: பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து கடல் அரிப்பைத் தடுக்கும் வழிமுறை- மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறையின் முயற்சி!
திமிராகப் பேசினால், தனிக்குணத்தை பார்க்க வேண்டிவரும்:
'மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது' என்று பிளாக்மெயில் (blackmail) செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளார்.
" மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 16, 2025
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க… https://t.co/jPbhicRdl8
இந்நிலையில், மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.