சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் ஊடக நிறுவனமாக விகடன் நிறுவனம், அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் இணைத்து விமர்சிக்கும் விதமாக சித்தரித்து, அட்டைப்படத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.
அந்த வகையில், பிப்ரவரி 10ஆம் தேதி விகடன் பிளஸ் இணைய இதழில் வெளியான பிரதமர் மோடி கார்ட்டூன் படத்தால் மத்திய அரசு விகடன் இணையதளத்தை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விகடன் குழுமமும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளன.
இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் @vikatan-னின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) February 16, 2025
கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு…
பாஜகவின் பாசிசத் தன்மை:
இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இதழியலில் நூறாண்டுக் காலமாக இயங்கி வரும் விகடனின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.கவின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்!
விகடன் குழுமம் வெளியிட்டுள்ள பதிவில், "விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.
முன்னதாக, விகடன் இணைய இதழான 'விகடன் ப்ளஸ்' இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும், பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.
நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை… pic.twitter.com/t9tHziB41e
— விகடன் (@vikatan) February 15, 2025
இந்த நிலையில் பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
இதையும் படிங்க: கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் - மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் வேண்டுகோள் !
நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.