தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

தேனியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது!

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்ட புகைப்படம்
கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்ட புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 9:19 PM IST

தேனி: ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாகவும், பெரும்பாலும் சிறுவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் கண்டமனூர் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சந்தேகிக்கும் படி நின்றிருந்த 70 வயதான ரத்தினம்மாள் என்பவரைப் பிடித்து, அவர் கையில் வைத்திருந்த துணிப்பையை சோதனை செய்துள்ளனர். அதில், 50 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரை கைது செய்து கண்டமனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில், அவரது மகன் பழனிச்சாமி (50) மற்றும் மருமகள் முருகேஸ்வரி (44) ஆகியோர் வாங்கிக் கொடுத்த கஞ்சாவை தினமும் சிறுவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக ரத்தினம்மாள் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து பழனிச்சாமி, முருகேஸ்வரி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details