ETV Bharat / bharat

உ.பி.யில் அதிகாலை நடந்த கார் விபத்து; நான்கு பெண்கள் உட்பட 5 பேர் பலி..! - UP ACCIDENT DEATHS

உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ANI)
author img

By PTI

Published : Nov 25, 2024, 10:13 AM IST

ஹர்தோய்: உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த நான்கு பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உ.பி.யின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள மல்லவன் பகுதியில் இன்று அதிகாலை திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் தனித்தனி வாகனங்கள் மூலம் மீண்டும் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். அதில் ஒரு எஸ்யூவி கார் மற்றும் பேருந்து கவுரிநகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது பேருந்து மீது அதிவேகமாக பின்தொடர்ந்து வந்த கார் மோதியுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் காருக்குள் பயணித்த 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நிருபேந்திர குமார் தெரிவித்ததாவது; இன்று அதிகாலை கவுரிநகர் பகுதியில் பேருந்து மீது எஸ்யூவி மோதியதில் நான்கு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: மாநில கட்சிகளின் பிளவால் ராஜாவான பாஜக..! மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன?

மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளன. உயிரிழந்த நான்கு பேரும் காரில் பயணம் செய்தவர்கள். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில், சீமா (40), பிரதிபா (32), பிரதிபா (42), ராம்லாலி (52), சுபம் (28) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.