சென்னை: ’இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமண விழாவில் சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரும் சேர்ந்து நடனமாடியுள்ளனர். டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் தனுஷ், இயக்கி நடித்து வரும் திரைப்படம் ‘இட்லி கடை’. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது தனுஷின் 52வது திரைப்படமாகும் இந்த வருடம் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ’இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரை பிரபங்களும் கலந்து கொண்டனர்.
Full vibe mode @dhanushkraja @Siva_Kartikeyan at @AakashBaskaran wedding party! #Dhanush pic.twitter.com/56GomwGBxL
— Chowdrey (@Chowdrey_) November 24, 2024
நயன்தாரா ’நானும் ரௌடி தான்’ பட காப்புரிமை விவகாரத்தில் தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து சிறிது நாட்களில் ஒரே விழாவில் இருவரும் கலந்து கொண்டு, அருகில் அமர்ந்தது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "காட்டுத் தீயை உங்களுக்கு கொடுக்க மூன்று ஆண்டுகளாக உழைத்துள்ளேன்" - 'புஷ்பா 2' நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன் பேச்சு!
இதனிடையே ஆகாஷ் பாஸ்கரன் திருமண பார்ட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன், அட்லீ, ப்ரியா அட்லீ, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் இடையே மோதல் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், இருவரும் ஆகாஷ் திருமண நிகழ்வில் சந்தித்து பேசிக் கொண்டனர். இந்நிலையில் தற்போது பார்ட்டியில் இருவரும் சேர்ந்து நடனமாடியுள்ளது அவர்களது ரசிகர்களை இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்