தர்மபுரி: பாலக்கோடு அருகே வீட்டின் முன்பு காவல் இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கவ்விக் கொண்டு காட்டிற்குச் சென்றுள்ளது. தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம். இவர் தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 16) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இந்த வீட்டின் அருகே சிறுத்தை வந்துள்ளது. இதனை பார்த்த நாய் குறைத்துள்ளது. இதனையடுத்து, சிறுத்தை அந்த நாயை கவ்விக்கொண்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளது.
இதனைப் பார்த்த மற்றொரு நாய் குறைத்துள்ளது. அப்போது நாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த விநாயகம் கதவை திறந்து வெளியில் சென்று பார்த்தபோது, நாயை வாயில் கவ்விக் கொண்டு சிறுத்தை அங்கிருந்து ஓடியுள்ளது. இந்த காட்சிகள் வீட்டின் முன்பாக இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பாலக்கோடு வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதை அறிந்த பொதுமக்கள் ஆசத்தில் உள்ளனர். விரைந்து சிறுத்தை பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.