ETV Bharat / state

"நிதிக்காக முதலமைச்சர் மத்திய அரசிடம் அடிபணியமாட்டார்" - அமைச்சர் கோவி செழியன் - MINISTER GOVI CHEZHIAAN

தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் யாருக்காகவும் நிதிக்காக ஒருபோதும் மத்திய அரசிடம் அடிபணியமாட்டார்கள் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கோவி செழியன்
அமைச்சர் கோவி செழியன் (@GChezhiaan)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2025, 10:55 PM IST

சென்னை: திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவு போட்டியில் வெற்றி பெற்ற 37 மாவட்டங்களைச் சேர்ந்த 333 மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்குதல் மற்றும் வெளிநாடு செல்ல தடையின்மைச் சான்று வழங்கும் இணையவழி நுழைவாயில் தொடக்க விழா, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் கலந்துக்கோண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியுள்ளார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கோவி செழியன், “உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மற்ற மாநிலங்கள் 28 சதவீதம். ஆனால், தமிழ்நாடு 48 சதவீதம் பெற்று தற்போழுது முதலிடத்தில் உள்ளது. ஆராய்ச்சிப் படிப்பு மற்றூம் பெண்கல்வியிலும் தமிழ்நாடு முதலிடம். கல்லூரி கல்விக்கு நீட், க்யூட் நுழைவுத் தேர்வை மட்டுமே வைத்து மாணவர்கள் தரத்தை முடிவு செய்வது என்பது முற்றிலும் நயவஞ்சகமானது.

3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு மணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது தேவையற்ற ஒன்று. இது இடைநிற்றலையே ஊக்குவிக்கும். தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையையும், தற்போதுள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வி முறையே மாற்றக்கூடாது என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகும். நுழைவுத் தேர்வை எதிர்ப்பதில் இந்தியாவிலேயே இன்று மட்டுமல்ல என்றுமே தமிழ்நாடு மட்டும் தான் முன்னணியில் நிற்கிறது.

இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை ஏற்குமாறு மத்திய அரசு மிரட்டுகிறது! திமுக எம்எல்ஏ எழிலன் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுப்புக்கும் முயற்சிக்கு பிற மாநிலங்களின் முதலமைச்சர்களும், இந்தியாவிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்களும் ஆதரவு தெரிவிக்கின்றன. PUC இருந்த காலத்தில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் அனைத்து பாடங்களையும் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே PUC பெறும் நிலை இருந்தது. இதனால், மேற்படிப்பிற்கு எவரும் சேர்க்கை பெறவில்லை. இதே நிலை தான் இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்பு கொண்டு வந்தால் ஏற்படும்.

இதனால் பட்டப்படிப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைய வழிவகுக்கும். இது கல்வியை ஒரு சாரார்க்கு மட்டுமே கொண்டு சேர்க்கும் முயற்சியாகும். பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகளை ஏற்காத பட்சத்தில், பட்டங்களை செல்லாததாக்கப்படும் மற்றும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மிரட்டுவது கூட்டாட்சியின் தன்மையை சீர்குலைக்கும் சதி செயலாகும். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் பேசியதாவது, “தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது எனவும், மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என்று மிரட்டல் (Blackmail) செய்வதை தமிழர்கள் ஒரு நாளும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

எங்கள் உரிமையை தான் கேட்கிறோம். உங்கள் தனிச்சொத்தை கேட்பது போல் திமிராக பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என ஏற்கனவே முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு அகம்பாவம் மற்றும் ஆணவத்தின் உச்சம். ஒரு போதும் நிதிக்காக தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் யாருக்காகவும் அடி பணிய மாட்டார்கள்” இவ்வாற் அவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.