தேனி:கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வருடந்தோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுற்றுலாத் துறை நிர்வாகத்தினர் சுருளி அருவியில் சாரல் திருவிழாவினை நடத்தி வருகின்றனர்.
கோலாகலமாக துவங்கிய சுருளி சாரல் திருவிழா.. குஷியில் சுற்றுலாப் பயணிகள்!
Published : Sep 28, 2024, 4:42 PM IST
|Updated : Sep 28, 2024, 8:08 PM IST
அந்த வகையில், இந்த ஆண்டும் சுருளி அருவி சாரல் திருவிழா இன்று (செப்.28) துவங்கி, அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவினை மாவட்ட ஆட்சியர் சஜீவனா, மேகமலை வனச்சரக இணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த சாரல் விழாவில் ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. திருவிழா துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.