ETV Bharat / state

மதுரை விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி - தொடரும் போராட்டம்!

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அமைச்சர் மூர்த்தியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சின்ன உடைப்பு கிராம மக்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சின்ன உடைப்பு கிராம மக்கள் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

மதுரை: தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது . பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முடிவு செய்யப்பட்டது. அதன்படி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள வீடு மற்றும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக தெற்கு தாசில்தார் விஜயலட்சுமி, மதுரை விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் பிரபாகரன், ஆகியோர் ஜேசிபி வாகனங்களுடன் கிராமத்திற்கு வருகை தந்தனர்.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை : கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மறியல்

இந்த தகவல் அறிந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கிராமத்தின் முன்புறமுள்ள தியாகி இமானுவேல் சேகரன் சிலை முன்பு குவிந்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் இடம் பேச்சு வார்த்தை நடத்திய கிராம மக்கள்," தங்களுக்கு மூன்று சென்ட் இடம் வழங்க வேண்டும்.

அந்தப் பகுதியில் பள்ளிக்கூடம் சுடுகாடு கோயில் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே நிலம் விரிவாக்கம் தொடர்பாக அறிவித்தவுடன் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்க இருப்பதாகவும் தாசில்தாரும் காவல் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சின்ன உடைப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.