ETV Bharat / snippets

சென்னை ரிப்பன் கட்டிடத்தை பார்வையிட அரிய வாய்ப்பு!- மாநகராட்சியின் அதிரடி அறிவிப்பு

சென்னை ரிப்பன் கட்டிடம்
சென்னை ரிப்பன் கட்டிடம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 6:03 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "111 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை ரிப்பன் கட்டிடத்தை சுற்றி பார்க்க விரும்பும் பொது மக்கள் Commcellgcc@gmail.com என்ற இமெயில் முலமாகவும் 9445190856 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் பதிவு செய்துக்கொள்ளலாம்.

இதில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிடத்தின் கட்டுமானம் குறித்தும் அந்த கட்டிடத்தின் இயங்கு முறை உள்ளிட்டவற்றை அறிந்துக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். இது குறித்து பேசிய சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், “ரிப்பன் கட்டிடம் சென்னையில் மிக பழமை வாய்ந்த கட்டிடம். இதை பார்ப்பதற்கு
பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறிப்பாக பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். எனவே இந்த ரிப்பன் கட்டிடத்தை அவர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படும்” என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.