ETV Bharat / state

"அரசின் திட்டங்களில் பெரும்பான்மையானவை மகளிருக்கே" - அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு!

அரசு செயல்படுத்தக் கூடிய திட்டங்களில், பெரும்பான்மையான திட்டங்கள் மகளிருக்கு பயன் தரக்கூடிய திட்டங்களாக வடிவமைத்து அதனை முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கரூர் : கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 71வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 'தமிழ்நாட்டில் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள், மேலும் 3,558 பயனாளிகளுக்கு ரூ 37.01 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், இது கூட்டுறவு வார விழா மட்டுமல்ல. நம் அனைவரின் குடும்ப விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு செயல்படுத்தக் கூடிய திட்டங்களில், பெரும்பான்மையான திட்டங்கள் மகளிருக்கு பயன் தரக்கூடிய திட்டங்களாக வடிவமைத்து அதனை முதலமைச்சர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 13 லட்சம் மகளிர் பயன்பெறும் வகையில், ரூ.5 ஆயிரம் கோடி அளவிற்கு நகைக்கடன்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தள்ளுபடி செய்தார். இதில், கரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.63 கோடி அளவில் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 ஆயிரம் மகளிர் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர்.

சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ரூ.2,756 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்து 15 லட்சத்து 88 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்திருக்கக் கூடியவர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். அதில், கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ரூ.26 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டு, மொத்தம் 13 ஆயிரம் மகளிர் பயன்பெற்றிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : கருவூலக் கணக்குத் துறையுடன் ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு; தமிழக தலைமைச் செயலக சங்கம் கண்டனம்!

கரூர் மாவட்டத்தில், கடந்த காலங்களில் ரூ.5 கோடிக்கும் மேல் கடன்களை வழங்கியிருந்த சங்கங்கள் என்றால் அது வெறும் 9 சங்கங்கள் தான். ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், முதலமைச்சர் நடவடிக்கையின் காரணமாக, கரூர் மாவட்டத்தில் அனைத்து சங்கங்களும் ரூ.6 கோடிக்கும் மேல் கடனை வழங்கக் கூடிய அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முதலமைச்சர் தான் காரணம்.

கரூர் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறை மூலமாக, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் கணினி மையமாக்குதல் பணியில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்" என மேடையில் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் உள்ளிட்ட கூட்டுறவு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.