ETV Bharat / state

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது! - KASTHURI ARREST

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை கஸ்தூரி, கோப்புப்படம்
நடிகை கஸ்தூரி, கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 9:48 PM IST

சென்னை : பிராமண சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசினார். அப்போது திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது.

இவர் பேசிய கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தும், தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இவ்வாறு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்ததையடுத்து நடிகை கஸ்தூரி சமுக வலைதளம் மூலமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 192, 196(1)(a), 353(1)(b) and 353(2) BNS ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக கோரி நடிகை கஸ்தூரிக்கு சம்மன் வழங்க அவருடைய இல்லத்திற்கு எழும்பூர் போலீசார் சென்றனர். அப்போது அவருடைய வீடு பூட்டி இருந்ததாகவும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தகவல் வெளியானது.

இதையும் படிங்க : நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் மறுப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதையடுத்து நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர் ஹைதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து தனிப்படை போலீசார் ஹைதராபாத்திற்கு சென்று அங்கு தேடினர். ஆனால், அந்த வீட்டையும் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனால் தனிப்படை போலீசார் ஹைதராபாத் மற்றும் ஆந்திராவில் முகாமிட்டு தேடி வந்தனர். ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்போது அந்த திரைப்பட தயாரிப்பாளர் யார்? கஸ்தூரி எங்கு பதுங்கி உள்ளார்? என தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் வைத்து நடிகை கஸ்தூரியை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கஸ்தூரியை சென்னை அழைத்து வர தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.