தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

தாயிடம் நட்பாக பழகி மகளை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது.. ஈரோட்டில் நடந்தது என்ன?

கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்
கைது செய்யப்பட்ட விஸ்வநாதன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 10:11 AM IST

Updated : May 28, 2024, 7:45 PM IST

ஈரோடு: கோபி மேட்டுவளவு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன்(31). கோபிசெட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரின் தாயாரிடம் நட்புடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக பழகி வந்துள்ளார். இத்தகைய சூழலில், நாளடைவில் அந்த சிறுமியின் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, சிறுமியின் தாயார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், இது குறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்ததில், சிறுமி நடந்தவற்றைக் கூறியதை அடுத்து, சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Last Updated : May 28, 2024, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details