ETV Bharat / state

"போலி NRI சான்றிதழ் அளித்த மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை" - மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குழு வார்னிங்! - STUDENTS FAKE NRI CERTIFICATE ISSUE

மருத்துவ படிப்பில் சேர என்ஆர்ஐ இட ஒதுக்கீட்டிற்கு போலிச் சான்றிதழ் அளித்த நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், போலிச் சான்றிதழ் அளிக்கும் அனைத்து மாணவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என அருணலதா தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அருணலதா
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அருணலதா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 1:43 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் சேருவதற்கு போலியாக என் ஆர் ஐ சான்றிதழ்களை சமர்ப்பித்த ஆறு மாணவர்கள் மீதும், முதுகலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் இடம் வேண்டி போலியாக சான்றிதழ்களை விண்ணப்பித்த 44 பேர் மீதும் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அருணலதா தெரிவித்தார்.

இது குறிதது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அருணலதா, "தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர நான்கு சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது அதன் பின்னரும் காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வானது சிறப்பு ஸ்ட்ரே வேகன்ஸி கலந்தாய்வு அடிப்படையில் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை 29ஆம் தேதி வழங்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்கான கல்லூரிகளில் மாணவர்கள் டிசம்பர் 5ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம்
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (ETV Bharat Tamil Nadu)

இந்த சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டில் எம் பி பி எஸ் படிப்பில் சேர்ந்த மாணவர் ஒருவர் இறந்ததால் ஏற்பட்ட காலி இடத்திற்கும் ஒரு மாணவர் சேர்க்கப்பட உள்ளார். மேலும், நான்கு சுற்று கலந்தாயினும் நிரப்பப்படாத 6 எம்பிபிஎஸ் இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அன்னை மருத்துவக் கல்லூரிக்கு 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் புதிதாக அனுமதி அளித்ததால் அந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு பிடிஎஸ் படிப்பில் 29 இடங்களும் சேர்த்து மொத்தம் 89 இடங்களுக்கு நடத்தப்பட உள்ளது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி TNGDA போராட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் எந்த விதமான முறைகேடுகளும் நடக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வுக்குட்படுத்தி சரிபார்ப்பது வழக்கம். அவ்வாறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில் நடப்பாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அருணலதா பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அதில் மூன்று பேர் எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களாவர். இதையடுத்து ஆறு பேரும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி அவர்களில் மூவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும் ரத்து செய்யப்படுகின்றன.போலியாக சான்றிதழ் அளித்த ஆறு மாணவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆறு மாணவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்பட உள்ளது.

மேலும் முதுகலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்க உள்ளது. இந்த இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மருத்துவர்களில் 44 மாணவர்கள் போலியாக என்ஆர்ஐ சான்றிதழ் அளித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அனுப்பிய பொழுது அவர்கள் போலி என்ஆர்ஐ சான்றிதழ் அளித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த மாணவர்கள் மீதும் காவல்துறையில் புகார் அளிக்க சட்ட ஆலோசனை பெறப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போலியாக சான்றிதழ் அளிக்கும் அனைத்து மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்," என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.