சென்னை: டிசம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைத் தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் வருகிற டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துவங்கும். எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும். கடந்த முறையே 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என முடிவு செய்தாகிவிட்டது" எனத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு எத்தனை நாட்கள் சட்டமன்றம் கூடியுள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்த அப்பாவு, "அனைத்து கட்சியினரையும் கொண்ட அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி தான் சட்டமன்ற கூட்டத்தொடரின் நாட்களை அறிவிக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் அறிவிக்க இயலாது" என்றார்.
"மேலும், உரிமை மீறல் தொடர்பான விவகாரங்களில் தேவையான இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் வந்த பிறகு தான் சட்டமன்றம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. படிப்படியாக முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: "போலி NRI சான்றிதழ் அளித்த மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை" - மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குழு வார்னிங்!
செயற்கை நுண்ணறிவு குறித்த கேள்விக்கு, வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது, AI தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகம் AI தொழில் நுட்பத்தில் உலக அளவில் முதன்மை மாநிலமாக உள்ளது. சட்டமன்றத்தில் காகிதம் இல்லா சட்டப்பேரவையாக உள்ளது. புதிய தொழில்நுட்பங்களைப் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சென்று சேரும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (நவ.25) காலை 11 மணிக்கு துவங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்