ETV Bharat / state

“கள் இறக்க அனுமதிக்காவிட்டால் தமிழகத்தை விட்டு வெளியேறுவோம்" -பொள்ளாச்சி விவசாயிகள் அதிர்ச்சி முடிவு! - FARMERS PROTEST

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சேதம் அடைந்த வாழைக்கன்றுக்கு உரிய நிவாரணம் வேண்டி, வாழைகன்றுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விவசாயி பாலசுப்பிரமணியம்
விவசாயி பாலசுப்பிரமணியம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 1:53 PM IST

கோயம்புத்தூர்: கேரளாவில் கள் இறக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கள் இறக்க விவசாயிகள் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் உள்பட 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ( நவம்பர்.25) பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வாழை கன்று சுமந்து வந்து போரட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து விவசாயி பாலசுப்ரமணியம் கூறுகையில், “ஏழு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கனமழையால் எனது விவசாய நிலத்தில் வளர்ந்த வாழைக் கன்றுகள் சேதம் அடைந்தது. அதை ஆய்வு செய்ய அமைச்சர் முத்துசாமி நேரில் வந்தார். அப்போது அவர் எனக்கு இதற்கான நிவாரணம் வழங்குவதாக கூறினார். ஆனால் தற்போது ஏழு மாதங்களான நிலையில் இதுவரை எந்த நிவாரண நிதியையும் அவர் வழங்கவில்லை.

விவசாயி பாலசுப்பிரமணியம் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

கேரளாவில் கள் இறக்க கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கள் இறக்க விவசாயிகள் பலமுறை (பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில்) மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் விவசாயிகளாகிய நாங்கள் ஒரு முடிவு எடுத்துள்ளோம். தமிழகத்தில் உள்ள எங்களது நிலங்களை விற்று, கேரளாவில் சென்று விவசாயம் செய்து கொள்ள போகிறோம். தமிழக அரசு விவசாயிகள் நலன் கருதி உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: கலகலப்பு படபாணியில் 5 சால்வையை 50 தூய்மை பணியாளர்களுக்கு மாறி மாறி போர்த்திய அவலம்!-ஊரக வளர்ச்சிதுறை நடவடிக்கை பாயுமா?

இதையடுத்து அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரத்னா குமார் தலைமையிலான போலீசார், விவசாயகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.