ETV Bharat / state

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்! - TWO LEAVE SYMBOL

நிலுவை வழக்குகள் முடியும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம்
சென்னை உயர் நீதிமன்றம், இரட்டை இலை சின்னம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 1:46 PM IST

சென்னை: நிலுவை வழக்குகள் முடியும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என அளித்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதனால், தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படுவதாக அறிவிப்பு.!

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், “ ஒரு வாரத்தில் இந்த விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.