வேலூர்:வேலூர் மாவட்டம் செம்பாக்கம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில், சிமெண்ட் மூட்டை மற்றும் கம்பி ஏற்றிக்கொண்டு கோணவட்டம் நோக்கிச் சென்ற லோடு வேன் திடீரென நிலை தடுமாறி சென்டர் மீடியேட்டர்ல் இடித்தது. இதில் தலைகுப்புற கவிழ்ந்த வேன் விபத்துக்குள்ளானது.
வேலூர் அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து..தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
Published : Nov 4, 2024, 5:49 PM IST
இந்த விபத்தில் வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களோடு உயிர் தப்பினர். மேலும் லோடு வேனில் ஏற்றிவந்த சிமெண்ட் மூட்டைகள் ,கம்பிகள் சாலை முழுவதும் சிதறி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக அப்பகுதியில் உள்ள மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் கிளீனரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் 30 நிமிடத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.