ETV Bharat / state

போலி இமெயில் அனுப்பி ரூ 20 லட்சம் அபேஸ்! உபி நபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மடக்கியது எப்படி? - FAKE MAIL TO CHEMICAL COMPANY

தூத்துக்குடி தனியார் இரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு போலி இமெயில் அனுப்பி ரூபாய் 20 லட்சம் பணம் மோசடி செய்ததாக உத்திரபிரதேசத்தை சேர்ந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைபர் குற்றம் கோப்புப் படம், கைது செய்யப்பட்ட மோகித் பாரிக்கர்
சைபர் குற்றம் கோப்புப் படம், கைது செய்யப்பட்ட மோகித் பாரிக்கர் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2024, 11:56 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி தனியார் இரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு போலி இமெயில் அனுப்பி ரூபாய் 20 லட்சம் பணம் மோசடி செய்ததாக உத்திரபிரதேசத்தை சேர்ந்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய போலீசார், "தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு ஒடிசாவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் இருந்து மூலப்பொருட்கள் வருவது வழக்கம். மூலப்பொருட்கள் வந்த பிறகு வங்கி கணக்கில் பணம் செலுத்துவம் வழக்கமாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் எப்படியோ கண்காணித்து வந்த கும்பல் ஒடிசா மாநிலத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலிருந்து மூலப்பொருட்கள் வருவதுபோல் போலியான மெயிலை தூத்துக்குடி இரசாயன உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் நிதித்துறை பொது மேலாளருக்கு மோசடி நபர்கள் அனுபபியதாக தெரிகிறது.

மூலப்பொருட்களை அனுப்பி விட்டதாகவும் அதற்காக ரூபாய் 20 லட்சம் பணத்தை வங்கிக் கணக்கில் அனுப்புமாறும் கூறியுள்ளனர். அதாவது வழக்கமாக பணம் அனுப்பும் வங்கிக் கணக்குக்கு அனுப்பாமல் புதிய வங்கிக் கணக்கை கொடுத்து பணத்தை அனுப்ப கோரியிருக்கின்றனர். இதனை நம்பி இரசாயன உற்பத்தி நிறுவனத்தின் பொது மேலாளர் இமெயிலில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கிற்கு ரூபாய் 20 லட்சம் பணத்தை கடந்த (அக்.7) 07.10.2024 அன்று அனுப்பியுள்ளார்.

பணம் அனுப்பிய பின்னும் மூலப்பொருட்கள் வராததையடுத்து ஒடிசா டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு இரசாயன நிறுவனத்தின் மேலாளர் கேட்டபோது, நீங்கள் பணம் அனுப்பவில்லை, அதனால் நாங்கள் மூலப்பொருள் அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். அப்போதுதான் இரசாயன நிறுவனத்தின் மேலாளருக்கு தாம் ஏமாற்றப்பட்ட விவரம் தெரியவந்தது. இதையடுத்து அவர், என்.சி.ஆர்.பியில் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்,"என்றனர்.

இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு தினம்: பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், போலியான மெயில் எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தனர். உத்திரபிரதேசம் மாநிலம் இட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த மோகித் பாரிக்கர் (26) என்பவர் மேற்படி மெயிலை அனுப்பி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் உத்திரபிரதேச மாநிலம் சென்று மோகித் பாரிக்கரை கைது செய்து அவரிடம் இருந்த ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.